Sunday, April 15, 2018

தொழிலாளர் நலத்துறையில் முத்திரை கொல்லர் பணி

தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பளமாக மாதம் ரூ.15,900 - 50,400 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்படும். 01.07.2017 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் 32 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை ஆகியோர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அந்தந்த பகுதி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) அலுவலகங்களிலும், தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகங்களில் கட்டணம் ஏதுமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தற்போது பணி செய்யும் விவரங்களுடனும் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றுகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விண்ணப்பித்தில் ஒட்டியும், 2 புகைப்படங்களைத் தனியாகவும் இணைத்து பிற சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பத்துடன் அந்தந்த கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலக முகவரிக்கு மே 3 ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்கலாம்.

2 comments:

  1. தங்களது பதிவிற்கு நன்றி, இது பழைய பதிவு. மன்னிக்கவும்.

    ReplyDelete

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...