Wednesday, April 18, 2018

ஏப். 21-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் வரும் சனிக்கிழமை (ஏப்.21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை 8 வகுப்பு முதல் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில், பிள்ளையார்புரத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் ஏப். 21-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. முகாமில் 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, செவிலியர், கல்வியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் Ncs.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

மேலும், 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் நேரிலும் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 04652-264191 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...