Friday, April 27, 2018

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற உதவுகிறது கூகுள்


கூகுள் நிறுவனத்தின் தேடல் முடிவுகளில் வேலைவாய்ப்பு தேடலும் உட்படுத்தப்பட்டு, அதில் பல்வேறு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் திரட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கூகுள் நிறுவனத்தின் தேடல் இன்ஜினிலேயே உங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற முடிகிறது. புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புகளுக்கான தேடலை வெளியிடப் போவதாக இந்த தேடல் ஜாம்பவான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அம்சம், ஒரு புதிய தேடல் அனுபவமாக கூகுள் ஐ/ஓ 2017 இல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது இந்திய பயனர்களுக்காக இந்த அம்சம் களமிறக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளுக்கான கூகுளின் ஒரு பகுதியான இந்த வேலைவாய்ப்பு தேடல், வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களை நிறுவன வாரியாக இணைக்கும் முயற்சியை மையப்படுத்தி செயல்படுகிறது. இதற்காக வேலைவாய்ப்பு பொருத்தம் அளிக்கும் தொழில்துறை உடன் ஒரு நெருக்கமான கூட்டுறவைக் கொண்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு வேலைவாய்ப்பு தொழில்துறையை தேடுவதே ஒரு கடினமான செயல் என்ற நிலையில், நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் சிக்கல் மிகுந்ததாகவே உள்ளது. வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் இணையதளங்கள், செய்தித்தாள்கள் மற்றும் நோட்டீஸ் போர்டுகள் என்று எல்லா இடங்களிலும் பரவி கிடைக்கிறது. ஆனால் கூகுளை பொறுத்த வரை, "உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் திறமைகளுக்கு சரியாக பொருந்தும் வேலைவாய்ப்புகளைக்" கண்டறியும் முதன்மை இடமாக வேலைவாய்ப்பு தேடல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. தேடல் இன்ஜினியரிங் அணியின் சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் தலைவரான ஆச்சின்ட் ஸ்ரீவாஸ்தவா ஒரு பிளாக் இடுகையில் கூறியுள்ளதாவது, "நாடெங்கும் உள்ள எண்ணற்ற வேலை வாய்ப்புகளுடன் இந்தியர்களை இணைக்க, இந்த புதிய அனுபவத்தின் மூலமாக நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் யார் என்பதோ, எந்த மாதிரியான வேலைவாய்ப்பை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதோ ஒரு பொருட்டு அல்ல. உங்களுக்கு தேவையான மற்றும் திறமைக்கு பொருந்தும் வகையிலான வேலைவாய்ப்புகளைக் கண்டறிவது, தற்போது எளிதாகி உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்த புதிய அம்சத்தின் அறிமுகம் மூலம், "எனக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகள்", "புதியவர்களுக்கான வேலைவாய்ப்புகள்" அல்லது அதற்கு நிகரானது உள்ளிட்ட தேடல் சொற்தொடர்களைப் பயன்படுத்தி, தங்களைச் சுற்றிலும் உள்ள வேலைவாய்ப்புகளைக் குறித்து, வேலை தேடுபவர்கள் அறிந்து கொள்ள முடியும். இணையதளத்தில் உள்ள வேலைவாய்ப்பு செய்திகளைக் குறித்து ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்த முடிவுகளை இப்போது பெற முடிகிறது. இதற்காக ஏசியன்ஜாப்ஸ், பிரஷர்ஸ்வேல்டு, ஹெட்ஹோன்சோஸ், ஐபிஎம் டெலண்டு மேனேஜ்மெண்டு சோலியூஷன்ஸ், லிங்கிடுஇன், க்யூஸ்எக்ஸ், க்யூக்கர்ஜாப்ஸ், Shine.com, டி-ஜாப்ஸ், டைம்ஸ்ஜாப்ஸ் மற்றும் விஸ்டம்ஜாப்ஸ் உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்களுடன் பணியாற்றி, மிகவும் விரிவான வேலைவாய்ப்பு பட்டியல்களை அளிப்பதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், உங்களுக்கு தொடர்புடைய வேலைவாய்ப்பை நிறுவனங்களின் இணையதளங்கள் உட்பட பல்வேறு தளங்களில் இருந்து மிக விரைவில் அவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளோம். இந்தியாவைப் பொறுத்த வரை, தற்போது 90 ஆயிரத்திற்கும் அதிகமான வேலை அளிப்போரிடம் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு வேலைவாய்ப்பு வகைகள் மற்றும் தொழில்துறைகள் இருப்பதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு வேலை தேடுபவர்கள், வேலை வாய்ப்புகளைப் பார்த்து, அதன்பிறகு பணி பெயர், இருப்பிடம், அது முழுநேரம், பகுதி நேரம் அல்லது ஒரு பயிற்சிகாலம் போன்றவற்றின் அடிப்படையில் பிரித்தறியும் தேர்வுகள் அளிக்கப்படும். எதிர்காலத்தில் மேலும் பல தொடர்புடைய பிரித்தறியும் தேர்வுகளை அது கொண்டிருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், கூகுள் கணக்கு மூலம் நீங்கள் ஒரு முறை உள்நுழைந்த உடனே, வேலை வாய்ப்பு இடுகையைச் சேமித்து கொள்ளக் கூடிய தேர்வு, ஒரு முக்கியமான அம்சமாக அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு வேலைவாய்ப்பு தேர்வை அறிமுகம் செய்து, தனது 500 மில்லியன் பயனர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் அவர்களுடைய இணைப்புகளை பரிந்துரைச் செய்யவும் உரிய வாய்ப்புகளை அளித்த லிங்கிடுஇன் செயல்பாட்டிற்கும் சவால் விடுவதாக கூகுள் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தேடல் அமைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் 45 சதவீதத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு தேடல்கள் என்ற அபரிமித வளர்ச்சியைக் கண்டதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கேள்விகள் பெரும்பாலும் இணையதளத்தில் மட்டுமே நடந்துள்ளன என்பதால், மற்ற எந்தொரு இணையதள சேவையை விட பயனர்களுக்கான சிறந்த இடைமுகமாக கூகுள் நிறுவனத்தால் செயல்பட முடியும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...