மத்திய அரசு நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 54 டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 54
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Diploma Trainee (Electrical) - 36
பணி: Diploma Trainee (Civil) - 11
பணி: Diploma Trainee (Electronics) - 02
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Jr. Officer Trainee (HR) - 04
தகுதி:
55 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டு ஆண்டு முழுநேர முதுகலை பட்டம், முதுகலை பட்டயம், மனிதவள மேலாண்மையில் எம்பிஏ, எம்எஸ்டபுள்யூ முடித்திருக்க வேண்டும்.
பணி: Chemist - 01
தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
23.04.2018 தேதியின்படி 27 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. Chemist பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://careers.powergrid.in/2018NerDtRectt/docs/ad.pdf
No comments:
Post a Comment