Monday, April 2, 2018

ரயில்வேயில் 'டெக்னிகல்' வாய்ப்பு

கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் மேற்கு கடலோரத்தில் 760 கி.மீ., துாரம் அமைந்துள்ளது தான் கொங்கன் ரயில்வே வழித்தடம். இதில் மலைத்தொடர்கள், ஆற்றுப் படுகைகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் அதிகம். மங்களூருவில் துவங்கும் இந்த வழித்தடம் மகாராஷ்டிரா வரை தொடர்கிறது. இந்தியாவின் பெருமைக்குரிய இந்த ரயில்வே பிரிவில் பணிபுரிவது இயற்கை ஆர்வலர்களின் கனவு. இங்கு எலக்ட்ரிகல் பிரிவு சார்ந்த 65 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 

காலியிட விபரம் :
எலக்ட்ரீசியன் பிரிவில் 38ம், எலக்ட்ரிகல் சிக்னல் அண்ட் டெலிகாம் மெயின்டெய்னர் பிரிவில் 27ம் சேர்த்து மொத்தம் 65 இடங்கள் உள்ளன.

வயது : விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

 பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு என்.சி.வி.டி., அல்லது எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை எலக்ட்ரீசியன், ஒயர்மேன், மெக்கானிக் - எச்.டி., எல்.டி., எக்விப்மென்ட்ஸ் அண்ட் கேபிள் ஜாயிண்டிங், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம் : 500 ரூபாய்.

கடைசி நாள் : 2018 ஏப்., 30. 

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...