Thursday, April 19, 2018

பாரத ஸ்டேட் வங்கியில் 119 சிறப்பு அதிகாரி பணி

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட் உள்ள 119 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஏப்ரல் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: ஸ்பெஷல் மேனேஜ்மெண்ட் எக்ஸிக்யூடிவ்

காலியிடங்கள்: 35

கல்வித் தகுதி: சிஏ/ ஐசிடபிள்யுஏ/ ஏசிஎஸ்/ எம்பிஏ (நிதி)/ இரண்டாண்டுகள் முதுநிலை டிப்ளமோ (நிதி) முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும். 

வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: துணை பொது மேலாளர் (சட்டம்)

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 17 ஆண்டுகள் சட்ட அலுவலராகப் பணியாற்றிய முன் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதிலிருந்து 52 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: துணை மேலாளர் (சட்டம்)

காலியிடங்கள்: 82

கல்வித் தகுதி: சட்டத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 17 ஆண்டுகள் சட்ட அலுவலராகப் பணியாற்றிய முன் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்களின் மூலம் விண்ணப்பதாரரின் சுயவிவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பிரதியெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: https://www.sbi.co.in/webfiles/uploads/files/1521469978176_CRPD_RECTRUITMENT_SCO_ENGLISH.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...