Saturday, August 4, 2018

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துறையைச் சேர்ந்த தகுதியான டிப்ளமோ, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.:  CEPTAM-09/STA-B

மொத்த காலியிடங்கள்: 494

பணி: Senior Technical Assistant ' B ' (STA ' B' )

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Agriculture - 04
2. Automobile Engineering - 06
3. Botany - 03
4. Chemical Engineering - 13
5. Chemistry - 24
6. Civil Engineering - 04
7. Computer Science - 79
8. Electrical & Electronics Engineering - 16
9. Electrical Engineering - 35
10. Electronics & Instrumentation - 07
11. Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engg - 100
12. Geology - 03
13. Instrumentation - 05
14. Library Science - 11
15. Mathematics - 08
16. Mechanical Engineering - 140
17. Metallurgy - 08
18. Photography - 02
19. Physics - 16
20. Psychology - 05
21. Zoology - 05

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 29.08.2018 தேதியின்படி 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2018

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.drdo.gov.in/drdo/ceptam/download/poster_ceptam09_stab.pdf

Friday, August 3, 2018

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓட்டுநர் வேலை | TNAU Recruitment - Driver post -Coimbatore

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் நிரப்பப்பட உள்ள 21 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: R1/ 14192 /2018 Dated: 25.07.2018

பணி: ஓட்டுநர் (Driver)

காலியிடங்கள்:  21

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30.06.2018 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, மற்ற பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.dri.tnausms.in/Reports/DRIVER%20Recruitment-%202018.pdf

CPCL நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி | Engagement of Trade Apprentices in CPCL

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 142

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Fitter - 19
2. Welder - 07
3. Electrician - 09
4. Mechanic (Motor Vehicle) - 10
5. Mechanic Machine Tool Maintenance - 08
6. Machinist - 05
7. Turner - 04
8. Mechanic Auto Electrical and Electronics - 02
9. Instrument Mechanic - 03
10. Mechanic Repair and Maintenance of Vehicle - 02
11. Draughtsman (Civil) - 03
12. Draughtsman (Mechanical) - 2
13. Computer Operator and Programming Assistant - 06
14. Laboratory Assistant (Chemical Plant) - 05
15. Attendant Operator (Chemical Plant) - 07
16. Advanced Attendant Operator (Process) - 14
17. Accountant - 05
18. Back Office Assistant - 10
19. Executive (Marketing) - 02
20. Executive (Human Resource) - 06
21. Executive (Computer Science) - 06
22. Executive (Finance & Accounts) - 03
23. Security Guard - 04

தகுதி: சம்மந்தபட்ட துறைகளில் ஐடிஐ அல்லது பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 24-க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 12 மாதங்கள். சில பணியிடங்களுக்கு 18 முதல் 15 மாதங்கள்.

விண்ணபிக்கும் முறை: cpcl.co.in என்ற இணைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.08.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.cpcl.co.in/Recruitment

இந்தியன் வங்கியில் வேலை | RECRUITMENT OF PROBATIONARY OFFICERS ON INDIAN BANK

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 417 தரத்திலான 145 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 417

பணி: Probationary Officer (PO)

(எஸ்சி - 62, எஸ்டி - 31, ஓபிசி - 112, பொதுப்பிரிவினர் - 212)

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது இணையான தகுதிகள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்கும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018

ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2018

ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 04.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.indianbank.in/pdfs/rec/31072018porecprocess.pdf"

Wednesday, August 1, 2018

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு | Central Teacher Eligibility Test (CTET)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தத் தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கான அறிவிப்பை ஏற்கெனவே ஜூன் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. அதில் இந்தத் தேர்வானது வரும் செப்டம்பர் 16 -ஆம் தேதி நடத்தப்படும் எனவும், இதற்கு ஜூன் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர், திடீரென இந்த அறிவிப்பு நிறுத்தப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான மாற்று தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்தது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் அறிவிப்பு: இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான புதிய அறிவிப்பை சி.பி.எஸ்.இ. செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, சி.டி.இ.டி. தேர்வுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் 27 கடைசி நாள் எனவும், கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 30 கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழு விவரங்களும் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

கல்வித் தகுதி: கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட பள்ளிகளில் 5 -ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

8 -ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பட்டப்படிப்புடன், 2 ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மேற்கொண்டிருக்க வேண்டும்; அல்லது பட்டப் படிப்புடன், பி.எட். படிப்பையும் முடித்திருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...