Friday, April 13, 2018

பாத வெடிப்புகளை போக்க

நல்லெண்ணெய்:

பாதங்களில் நல்லெண்ணெய்யை தடவி விடுங்கள். எண்ணெய் சருமத்தில் உறிஞ்சும் வரை மென்மையாக மசாஜ் செய்யவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன் இதனை செய்யலாம். நல்லெண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சியும் ஈரப்பதமும் தருகிறது. சருமத்தை மிருதுவாக்கி, மென்மையாக்குகிறது. இதனால் வெடிப்புகள் விரைவில் மறைகிறது.

தேங்காய் எண்ணெய் : 

உங்கள் பாதங்களில் தாராளமாக தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். தடவிய பின் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். காலையில் வழக்கம் போல் கழுவிக் கொள்ளுங்கள். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து விடும். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. வறண்ட சருமத்தை மாயச்ச்சரைஸ் செய்து, இறந்த செல்களை போக்குகிறது. சருமத்தின் ஆழத்திற்குள் சென்று ஊடுருவி, புத்துணர்ச்சியைத் தருகிறது.

பேக்கிங் சோடா :

ஒரு டப்பில் தண்ணீர் வைத்து அதில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். பேகிங் சோடா கரைந்தவுடன் உங்கள் பாதங்களை அந்த நீரில் ஊறவைக்கவும். 10-15 நிமிடம் கழித்து கால்களை படிகக்கல்லால் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். பிறகு சுத்தமான நீரில் கால்களைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். பொதுவாகவே பேகிங் சோடாவில் அழற்சியை போக்கும் தன்மை இருப்பதால் , சருமத்தின் இறந்த செல்களை அழித்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

கற்றாழை:

வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு கால்களை துடைத்து நன்றாக காய வைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை கால் பாதங்களில் தாராளமாக தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து இதனை செய்து வரலாம். நல்ல மாற்றம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யலாம். வறண்ட சருமத்தை மிருதுவாக மாற்ற கற்றாழை உதவுகிறது. சருமத்தில் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து, வெடிப்புகளைப் போக்குகிறது. கற்றாழையில் இருக்கும் அமினோ அமிலங்கள் சருமத்தின் மேன்மையை அதிகரிக்கும்.

வைட்டமின் ஈ:

எண்ணெய் வைட்டமின் ஈ மாத்திரையில் துளையிட்டு அதன் எண்ணெய்யை வெளியில் எடுத்துக் கொள்ளவும். பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் இந்த எண்ணெய்யை தடவவும். ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம். வைட்டமின் ஈ எண்ணெய், சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் பாதங்கள் மென்மையாக மாறுகிறது.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...