Sunday, April 22, 2018

குரூப் 2 தேர்வு: வரும் 25-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25-இல் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து, பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

குரூப் 2 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோருக்கு நேர்காணல் கடந்த ஜனவரி 22 முதல் பிப்ரவரி 19 வரையில் நடந்தது. 1,094 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 3 வரையில் நடந்தது. 

முதல் கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் நிரப்பப்படாமல் மீதமுள்ள 88 காலிப்பணியிடங்களில் 45 பதவிகளுக்கு மட்டும் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி நடத்த தேர்வணையம் முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாணையை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...