Wednesday, April 11, 2018

காற்றை சுத்தம் செய்யும் டயர்



நகர்ப்புற காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பவை வாகனங்களே. அதே வாகனங்களால், காற்று மாசு பாட்டை குறைக்க உதவ முடிந்தால் எப்படி இருக்கும்.

ஜெனீவாவில் அண்மையில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில், டயர் தயாரிப்பாளரான, 'குட்இயர்' ஒரு புதுமையை அறிமுகப்படுத்தியது.

'ஆக்சிஜன்' என்ற புதுமையான அந்த சக்கரத்தின் சுவர்களில், பாசிகள் வளர்கின்றன. 

டயர் தரையை தொடும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இடைவெளிகள் வழியாக, ஈரப்பதம் டயருக்குள் வர, அதை வைத்து பாசி வளர்கிறது. 

இந்தப் பாசி, காற்றிலுள்ள, கார்பன் - டை - ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடும். 

மேலும், அது பச்சையம் தயாரிக்கும் போது நிகழும் வேதி வினை மூலம், சிறிதளவு மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது.

பாரிஸ் போன்ற நகரில் ஓடும் எல்லா வாகனங்களும், ஆக்சிஜன் டயர்களை மாட்டியபடி ஓடினால், ஆண்டுக்கு, 4,000 டன் அளவுக்கு, பாரிசின் காற்றிலுள்ள கரியமில வாயுவை, மறுசுழற்சி செய்ய முடியும் என்கிறது குட்இயர்.

ஆக்சிஜன் தயாரிக்கும் சிறிதளவு மின்சாரம், வாகனத்தில் உள்ள உணரிகள், சில விளக்குகள், தகவல் அறிவிக்கும் மின் பலகை போன்றவற்றை இயக்கவும், பயன்படுத்தவும் முடியும். 

இப்போதைக்கு, வெகு சில ஆக்சிஜன் டயர்களை மட்டுமே, குட்இயர் தயாரித்துள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, அது சந்தைக்கு வரும். சாலையில் ஓடும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...