காரணங்கள்:
நகங்கள் ஆரோக்கியமாக வளர அவை உறுதியுடன் இருத்தல் மிக மிக அவசியம். அவ்வாறு இல்லையெனில் மிகவும் கடினம். மேலும் உடையும் தன்மை கொண்ட நகங்கள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம். இதற்கு பல காரணங்கள் உள்ளன அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை, தோல் சம்பத்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோலழற்சி, இரத்த சோகை, பூஞ்சை தொற்று என அடுக்கி கொண்டே போகலாம்.
செய்ய வேண்டியது:
1. பயோட்டின் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், முட்டை, தக்காளி, பாதாம், காலிஃபிளவர், பருப்புகள், ஸ்ட்ராபெர்ரி, சோயாபான்ஸ், பால் போன்ற உணவுகளை உண்ண வேண்டும். தேவைபட்டால் உங்கள் மருத்துவரைப கலந்தாலோசித்து பிறகு பயோட்டின் உணவுகளை உண்ணலாம்.
2. பயோட்டின் நிறைந்த உணவுகள் மட்டும் அல்லது ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளான மீன், பால் பொருட்கள், இறைச்சி, விதைகள் மற்றும் கொட்டைகள், கீரை மற்றும் காய்கறிகள் என ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
3. தினமும் வாசலின் கொண்டு நகங்களை மசாஜ் செய்யுங்கள்.
4. தினமும் உடற்பயிற்ச்சி செய்யுங்கள், இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து நகங்கள் எப்பொழுதும் புது பொலிவுடன் இருக்கும்.
5. குறிப்பிட்ட இடைவேளையில் நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள்.
6. சிறந்த தயாரிப்பு மற்றும் தரமான நக பூச்சுகளை பயன்படுத்துங்கள்.
7. நகங்களை சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டுங்கள் தன்னால் வைட்டமின் டி நகங்களுக்கு எளிதாக கிடைக்கும்.
8. நிறைய தண்ணீர் குடியுங்கள்.
9. ஃக்யுடிசெல்சை வெட்டி எடுக்காமல் உள்ள தள்ளி விடுவது நோய் தொற்றை குறைக்கும்.
10. ஃக்யுடிசெல்சை ஈரப்பதத்துடன் வைத்திருக்க அதற்கான கிரீம் உபயோக படுத்துங்கள்.
11. நகங்களை மேல் பகுதியை தேய்த்து சுத்தமாக வையுங்கள், இதனால் நகம் உடைவதை தடுக்கலாம்.
12. வெளியில் செல்லும் போது, அதிக நேரம் நீரை கையாளும் பொழுது, ரசாயன பொருட்களை தொடும் பொழுது கையுறைகளை பயன்படுத்துங்கள்.
செய்யக்கூடாதவை:
1. அதிக நேரம் நீரை கையாளுதல் மற்றும் ரசாயன பொருட்களை கையாளுதல் ஆகியவற்றை தவிர்க்கவும்.
2. அசிட்டோன் மற்றும் பார்மால்டிஹைடு போன்ற ரசாயனம் கொண்ட நக பூச்சுகளை தவிருங்கள்.
3. செயற்கையான நகங்கள் உபயோகிப்பதை தவிருங்கள்.
4. ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிடைசர் நகங்களின் ஈரப்பதத்தை எடுத்துவிடும் எனவே அவற்றை தவிருங்கள்.
5. நக பூச்சு நீக்கிகளை அதிகமாக உபயோகபடுத்த வேண்டாம் .
6. கடைசியாக, நகங்களை கடிப்பதை முற்றிலுமாக விட்டு விடுங்கள், இது உங்கள் நகங்களுக்கு மட்டும் அல்ல உடலுக்கும் தீங்கானது.
No comments:
Post a Comment