Friday, April 13, 2018

உப்பைக் குறைக்கும் பொருள்

சமையல் உப்பினால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க வெயில் காலத்தில் கடல் உப்பிற்குப் பதிலாக, பாறை உப்பு எனப்படும் மலை உப்பினைப் பயன்படுத்தலாம் என இயற்கை மருத்துவம் கூறுகின்றது. இதனை 'இந்துப்பு' என்பர். இந்த உப்பில் அயோடின் சத்து உள்ளது. இது தவிர பொட்டாசியம், சிங்க் போன்ற கனிமச் சத்துக்களும் இயற்கையாகவே உள்ளன. இந்த மலை உப்பு, மிக எளிதில் கரைந்து விடும். வட மாநிலங்களில், கடல் இல்லாத இடங்களில், பாறைகளில் இருந்து தான் உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. மலை உப்பு உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பலோடி முக்கிய நகராக உள்ளது.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...