Showing posts with label நாட்டு மருத்துவம். Show all posts
Showing posts with label நாட்டு மருத்துவம். Show all posts

Monday, June 25, 2018

எளிய சித்த மருத்துவ குறிப்புக்கள் | Easy Home Made Health Tips


அனைவரும் தெரிந்துக் கொள்ளக்கூடிய வீட்டிலேயே செய்யும் சில எளிய மருத்துவ குறிப்புகள், நீங்களும் செய்து பலன் பெறலாம்.

இடுப்புவலி:
  • சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் ”இடுப்புவலி” நீங்கும்.
தாய்ப்பால் சுரக்க:
  • அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
ஆறாத புண்கள்:
  • விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
வயிற்றுப் போக்கு :
  • கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
உடம்புவலி:
  • சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
நெருப்பு காயம்:
  • நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
நரம்புகள் வலிமை மற்றும் ஞாபக சக்தி:
  • வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
கண்வலி மற்றும் கண் நோய்கள் :
  • பசுவின் பால் நூறு மில்லி அதே அளவு  தண்ணீரில் விட்டு வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
உடல் பருமன் ,கக்குவான், இருமல் :
  • புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
வயிற்றுப்புண் :
  • பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
வாந்தி மற்றும் பித்த நோய்கள்:
  • கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
மாரடைப்பு:
  • சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
தொண்டைக் கரகரப்பு:
  • பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

Saturday, June 16, 2018

குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 10 இயற்கை உணவுகள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!

1. கீரை வகைகள்:

வளரும் குழந்தைகளுக்கு தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது. 

இதில் அதிகளவில் உள்ள அயர்ன், வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்தத்சோகை ஏற்படாமல் தவிர்க்கும்.

2. காய்கறிகள்:

உங்கள் குழந்தைகளின் தட்டில் காய்கறிகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். முக்கியமாக, பீட்ரூட், கத்தரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், மஞ்சள் மற்றும் பச்சை குடமிளகாய், மஞ்சள்பூசணி போன்றவை. பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காளான் மிக நல்லது. 

மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சூப் ஆகச் செய்து காலையில் அல்லது மாலையில் அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்க, 'ரெசிஸ்டன்சி பவர்' அதிகரிக்கும். அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டன், எழும்பு சூப் நல்லது.

3. தயிர்:

தயிரில் உள்ள ஆன்டி பாக்டீரியாக்கள், கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை வரவிடாமல் தடுக்கும், இதனால் குடல் சுத்தமாகி வயிறு இன்ஃபெக்ஷன் ஆகாமல் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். 

தயிர் பிடிக்காத குழந்தைகளுக்கு ஒரு டம்ப்ளர் மோர் குடிக்கக் கொடுக்கலாம்.

4. பழ வகைகள்:

ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, மாதுளை என்றுதான் பொதுவாக பழங்கள் வாங்குகிறோம். அத்தோடு வைட்டமின் சி இருக்கும் பழங்களையும் அதிகளவில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். 

பப்பாளி மற்றும் நெல்லிக்காய், சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு என புளிப்புத்தன்மையுடைய பழவகைகளில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும், 

பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கும்.

5. நட்ஸ்:

பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவர, நோய் எதிர்பு சக்தி சீராக வளரும். இவற்றில் அதிகளவில் புரோட்டீன்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடித்து, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

6. மீன்:

குழந்தைகள் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டியது, மீன். புரோட்டீன் அதிகம் உள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது. 

இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க உதவுவதுடன், கண்பார்வை குறைபாட்டைத் தவிர்த்து மூளைவளர்ச்சிக்கு உதவும்.

அதனால், வாரத்தில் ஒரு முறையாவது குழந்தைகளுக்கு மீன் கொடுக்கவும்.

7. தானிய வகைகள்:

கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை எல்லாம் கலந்து பொடிசெய்து, கஞ்சியாகவோ, ரொட்டியாகவோ அல்லது தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். 

இவற்றில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலைத் தொற்றுகளில் இருந்து காக்கும்.

8. முட்டை:

வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கியிருப்பதால் உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் உதவும். 

எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி, வேகவைத்த முட்டையில் அதிகளவு உள்ளது.

9. பூண்டு:

உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிற்கும் திறன் கொண்டது பூண்டு. 

இதில் உள்ள Allicin என்ற பொருள், இன்ஃபெக்ஷனால் வரக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி, காய்ச்சல், சளி அண்டாமல் காக்கும். 

அதனால் தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் உணவில் 2 அல்லது 4 பல் பூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

10. மஞ்சள்தூள்:

மஞ்சள்தூளில் ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் ஆன்டி வைரஸ் இருப்பதால் நோய் எதிர்பு சக்தி அதிரிக்க உதவும். 

காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல் போன்ற நோய்கள் அண்டாமல் தடுக்கும். 

மேலும், ரத்தம் சுத்தம்செய்ய உதவவல்லது மஞ்சள்தூள். குழந்தைகளுக்கு இரவு கொடுக்கும் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொடுக்க, நன்றாக உறங்குவார்கள். 

அந்தச் சுவை விரும்பாத குழந்தைகளுக்கு, மோரில் மஞ்சள்தூள் கலந்து கொடுக்கலாம்.

Monday, June 11, 2018

உடலுக்கு புத்துணர்வு தரும் பானங்களை வீட்டிலேயே செய்வது எப்படி?

சமையலறையில் உள்ள பொருட்கள், எளிதில் கிடைக்க கூடிய கொத்தமல்லி, ஆரஞ்சு, பருப்பு கீரை ஆகியவற்றை கொண்டு உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி புத்துணர்வு தரும் பானங்கள் தயாரிக்கலாம். அதிக வெப்பத்தால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். 

நாவறட்சி, சிறுநீர் தாரையில் எரிச்சல், தோலில் ஏற்படும் எரிச்சல், கொப்பளங்கள், வெடிப்பு, கட்டிகள் போன்ற பாதிப்பு ஏற்படும். இப்பிரச்னைகளை சரிசெய்து, உடலுக்கு புத்துணர்வு தரக்கூடிய பானங்களின் செய்முறை விளக்கத்தை பார்ப்போம். 

கொத்தமல்லி இலை பானம் : 

தேவையான பொருட்கள்: 

கொத்தமல்லி, எலுமிச்சை, தேன். கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து கொள்ளவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்க்கவும். 

இந்த பானத்தை தினமும் ஒரு தடவை குடித்துவர உடல் புத்துணர்வாக இருக்கும். உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சி ஏற்படும்.

அதிக உஷ்ணத்தால் தோல் வறட்சி, கண்களில் எரிச்சல், அதிக தாகம், வியர்வை, துர்நாற்றம், வியர்குரு போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு கொத்தமல்லி மருந்தாகிறது. 

இது உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையது. உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது.

ஆரஞ்சு பழ பானம் :

தேவையான பொருட்கள்: 

ஆரஞ்சு பழம், சீரகப் பொடி, தேன். ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது நீர்விடவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, தேன் சேர்த்து குடித்துவர உடல் அசதி போகும். இது நோய் எதிர்ப்பு சக்தி உடையது. கல்லீரலை பலப்படுத்தும். 

ஆரஞ்சில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. மருத்துவ குணங்களை உடைய ஆரஞ்சு, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது. உஷ்ணத்தை குறைக்கிறது. உடலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

பருப்பு கீரையை  பானம் :

தேவையான பொருட்கள்: 

பருப்பு கீரை, சீரகப் பொடி, உப்பு. பருப்பு கீரையை நீர்விட்டு சுத்தம் செய்து எடுக்கவும். இதனுடன் சீரக பொடி, சிறிது உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாரம் இருமுறை குடித்துவர அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். வியர்குரு, அம்மை, அக்கி வராமல் பாதுகாக்கலாம். 

கோழி கீரை என்று பருப்பு கீரையை கூறுவதுண்டு. பறவைகள் விரும்பி சாப்பிடும் இந்த கீரை, அதிக சத்துக்களை உள்ளடக்கியது. 

பாதாம் பானம் :

பாதாமை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்

பாதாம் பருப்பு, குங்குமப்பூ, பால், தேன். குளிர்ந்த பாலில் ஓரிரு குங்குமப்பூ, பாதாம் பொடி சேர்க்கவும். 

இதனுடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களது உடல் சோர்வு நீங்கும். புத்துணர்வு கிடைக்கும். 

பாதாம் பல்வேறு நன்மைகளையும் கொண்டது.

Thursday, June 7, 2018

அற்புத முலிகை | பிரியாணி இலை

பிரியாணி இலை
சமையலறையில் இருக்கும் பிரியாணி இலை, சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

மனதை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.

பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.

பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி, வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.

Tuesday, June 5, 2018

தலை முடி அடர்த்தியாக வளரச் செய்யும் எலுமிச்சைச் சாறு

1. உங்கள் கூந்தல் மிகவும் பிசுபிசுப்பாக இருக்கிறதா? 

அதற்கும் எலுமிச்சைச் சாறு பயன்படும், ஓர் எலுமிச்சையை முழுக்கச் சாறு பிழிந்து, அத்துடன் கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னர் அதனைத் தலையில் தடவி, அரை மணிநேரத்துக்குப்பின் குளியுங்கள். இதன்மூலம் சேபேசியஸ் சுரப்பியில் எண்ணெய் அதிகமாகச் சுரக்காது, பிசுபிசுப்பு குறையும்.

2.பொடுகுப் பிரச்சனையா?

சிலருக்குப் பொடுகுப் பிரச்சனை அதிகமாக இருக்கும், குறிப்பாக, குளிர்காலத்தில் பூஞ்சைத்தொற்றால் நிறைய பொடுகுகள் வரும், இதற்கு எலுமிச்சைச்சாறுடன் நீர் கலந்து தலையில் தடவிக் காயவிடவேண்டும், பிறகு அதனை அலசினால் பொடுகு பறந்துவிடும்!

3. கூந்தல் அரிக்கிறதா? 

எலுமிச்சையைச் சாறு பிழிந்து அரைமூடிமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், அத்துடன் கொஞ்சம் தயிரைச் சேர்த்துத் தலையில் தேயுங்கள், அரைமணிநேரம் விட்டு அலசுங்கள், அரிப்பு காணாமல் போய்விடும்!

4. அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறுடன் ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் சம அளவு தடவவேண்டும். இதனைக் கூந்தலின் அடிமுதல் நுனிவரை தேய்த்துவிட்டு 40 நிமிடம் கழித்துக் குளிக்கவேண்டும், இதன்மூலம் முடி வளர்ச்சி பெருகும், கூந்தல் அடர்த்தியாகும்.

6. முடி அடிக்கடி உதிர்கிறதா? 

எலுமிச்சைச் சாறுடன் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி, அதே அளவு மிளகுத்தூள் சேர்த்துத் தேயுங்கள், காய்ந்தவுடன் அலசுங்கள், முடி உதிர்வது குறையும்.

5. கூந்தல் வளைந்திருக்கிறதா? அதை நேராக்க விருப்பமா?

எலுமிச்சைச் சாறுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தேயுங்கள், ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள், நிமிர்ந்த கூந்தலால் உங்கள் தன்னம்பிக்கையும் நிமிர்ந்து நிற்கும்.

7. கூந்தல் மிகவும் அழுக்காக இருக்கா?

கூந்தல் அழுக்காக இருந்தால், சரும துவாரங்களில் அழுக்கு தங்குகிறது என்று பொருள், இதற்கும் எலுமிச்சைச் சாறைப் பூசலாம், இதனால் தலையிலுள்ள அழுக்கு நீங்கும், கூந்தல் அழகாகும்.

Saturday, June 2, 2018

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக்குவது எப்படி?

தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் :

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா:

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

கறிவேப்பிலை:

கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்:

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய்:

நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.

மிளகு:

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ:

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

Sunday, May 27, 2018

நரைமுடியை கருமையாக்க

நரைமுடியை போக்கி தலைமுடியை கருமையாக்க சில எளிய முறை , இதனை பின்பற்றலாமே...
தேவையான பொருட்கள்:

  1. பீட்ருட் சிறிய சைஸ்
  2. காபி பவுடர் - 3 ஸ்பூன்
  3. அரைத்த 10 செம்பருத்தி
  4. எலுமிச்சை

பீட்ரூட்டைத் துருவி, அதனுடன் காபி பவுடர், செம்பருத்தி பேஸ்ட் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அது 50 மில்லி அளவுக்கு சுண்ட வைக்க வேண்டும். 

சுண்டியதும் சிறிது நேரம் சூடு அடங்கும் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வைத்திருந்து பின் தலையை அலச வேண்டும். 

இதுபோன்று வாரம் ஒருமுறை செய்து வந்தால் கூடிய விரைவில் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

Thursday, May 24, 2018

சருமத்தை பொலிவு பெற செய்ய வேண்டியவை


மஞ்சள் மற்றும் தயிர்:

தயிரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.

தேங்காய் எண்ணெய்:

கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுதுவதற்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் சரும செல்களுக்கு சத்துகள் கிடைப்பதோடு, வறண்ட சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணங்களால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சருமத்தின் அழகும் அதிகரிக்கும்

Monday, May 21, 2018

பல் வலியை உடனடியாக குணப்படுத்த

  • முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும்), சிறிதளவு கிராம்பு பொடி (இது வலியை மரத்து போக செய்யும்) சேர்த்து பேஸ்டு செய்ய வேண்டும். 
  • பின்பு மிதமான சூட்டில் உள்ள நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். 
  • பிறகு தயார் செய்த பேஸ்டை வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
  • 15 நிமிடம் கழித்து இளஞ்சூடான நீரால் வாய் கழுவவும். இப்பொழுது பல்வலி நிச்சயமாக குறைந்து இருக்கும்.

Friday, May 18, 2018

கறிவேப்பில்லையின் மருத்துவ குணங்கள்

பொதுவாக உணவில் நறுமணத்திற்க்காகவும், சுவைக்காகவும் சேர்த்து கொள்ளப்படும் கறிவேப்பில்லை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

கறிவேப்பில்லையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி1, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் முடி வளர்ச்சிக்கும் இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் 120 நாள்களுக்கு தினமும் கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடலினை மெலிதாக வைத்து கொள்ள உதவுகிறது.

இரத்த சேகை உள்ளவர்கள் இந்த கறிவேப்பில்லை உடன் ஒரு பேரிச்சை பழத்தினை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.

இரத்த சேகையை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கறிவேப்பில்லை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் பச்சையாக இந்த கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

Thursday, May 17, 2018

வாழைப்பழத் தோலின் பலன்கள்

வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். 



முள்ளை எடுக்க வேண்டுமா? 

எளிய வழி: 

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.

வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.

சோரியாஸிஸ் பிரச்சனையா?

சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி .

மருக்கள் காணாமல் போகச் செய்ய :

மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

சரும அலர்ஜியா?

ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

முகப்பருவை எதிர்க்கிறது:

முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

வெண்மையான பற்கள் பெற :

மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.

காயங்கள் ஏற்பட்டுள்ளதா?

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.

Wednesday, May 9, 2018

கல்லீரலை சுத்தம் செய்வதற்கான எளிய மருத்துவம்

நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும்.



உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சீர்குலைந்து போனால் ஈரல் அழற்சி, ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவை உண்டாகும் அபாயம் இருக்கின்றன.

கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சை :

1.முதலில் ஒரு பானை, கை நிறைய உலர்ந்த திராட்சை மற்றும் இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. அரை கிளாஸ் அளவு உலர்ந்து திராட்சை எடுத்துக் கொண்டால், ஒன்றரை கிளாஸ் அளவு நீர் கொண்டு நீங்கள் கலக்க வேண்டும். 1:3 என்ற விகிதத்தில் தான் கலக்க வேண்டும்.

3.பானையில் உலர்ந்த திராட்சை மற்றும் நீர் கலந்த பிறகு அதை மூடி வைத்து சில நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். சூடாகிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். ஓர் நாள் இதை உங்க சமையல் அறையிலேயே வைத்துவிடுங்கள்.

4.அடுத்த நாள் நீங்கள் காலையில் எழுந்ததுமே, அந்த நீரை குடிக்க வேண்டும். இதை ஒரு வாரம் விடாமல் கடைபிடித்து வந்தால், நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும்.

குறிப்பு:-

இதை பின்பற்றி வரும் நாட்களில் நீங்கள் கட்டாயம் துரித உணவுகள், அல்கஹால், சிகரட் போன்றவற்றை அறவே ஒதுக்கிவிட வேண்டும்.

Sunday, May 6, 2018

மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


  • மத்தி மீன். கண், இதயம், நீரிழிவு, எலும்பின் வலிமை என உடல் முழுக்க பல நலனை தருகிறது மத்தி மீன். உங்கள் உணவுப் பழக்கத்தில் மத்தி மீனை சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி, இரத்தத்தில் இருக்கும் சர்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டவர முடியும்.
  • மத்தி மீனில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் நல்ல பலனளிக்கிறது.
  • மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்கள் பாதிப்படைவதை தடுக்கிறது.
  • மத்தி மீனில் இருக்கும் அயோடின் தாதுசத்து முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.
  • மத்தி மீனில் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளிச்சிடும்.
  • மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண்பார்வை குறைபாடுகள் நீங்கி. பார்வை திறன் அதிகரிக்கும்.
  • விலையில் குறைவாகவும், நலனில் நிறைவாகவும் இருக்கும் மத்தி மீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதால் உங்களக்கு நல்ல உடல்திறன் கிடைக்கப் பெரும்.

Saturday, May 5, 2018

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள்

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.



நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி. 
நார்சத்து- 9 மி.கி. 
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி. 
புரதம்- 25 மி.கி. 
ட்ரிப்டோபான்- 0.24 கி. 
திரியோனின் – 0.85 கி 
ஐசோலூசின் – 0.85 மி.கி. 
லூசின் – 1.625 மி.கி. 
லைசின் – 0.901 கி 
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 
கிளைசின்- 1.512 கி 
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி 
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி. 
காப்பர் – 11.44 மி.கி. 
இரும்புச்சத்து – 4.58 மி.கி. 
மெக்னீசியம் – 168.00 மி.கி. 
மேங்கனீஸ் – 1.934 மி.கி. 
பாஸ்பரஸ் – 376.00 மி.கி. 
பொட்டாசியம் – 705.00 மி.கி. 
சோடியம் – 18.00 மி.கி. 
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி. 
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம். 
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.
நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

Sunday, April 29, 2018

பல் வலி புழுக்களை வெளியேற்றும் வைத்திய முறை

பல் வலி புழுக்களை வெளியேற்றும் வைத்திய முறை:

தேவையான பொருட்கள்:

(1) அகலமான அரிவாள் 1,
(2) தட்டு (plate) 1,
(3) கொட்டான்குச்சி எனும் ஒரு ஓட்டையுள்ள தேங்காய் சிரட்டை 1,
(4) கண்டங்கத்திரி விதை - கொஞ்சம்,
(5) சுத்தமான வேப்ப எண்ணெய் ,
(6) சிறிது தண்ணீர்.


செய்முறை: 

அகலமான தட்டில்  சிறிது தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். தட்டின்  மீது நன்கு பழுக்கக் காய்ச்சிய அரிவாளை வைக்கவும். அரிவாளின் அகலமான பகுதியில் சிறிது வேப்ப எண்ணெயை விடவும். புகை வரும். அதில் சிறிது கண்டங்கத்திரி விதையைப் போட்டு உடனடியாக ஒற்றை ஓட்டை உள்ள தேங்காய் சிரட்டையை (கொட்டான்குச்சி) கவிழ்த்து வைக்கவும்.

புகை நேரடியாக வாய்க்குள் செல்வதற்காகவே சிரட்டை உபயோகிக்கப்படுகிறது. 

சிரட்டை ஓட்டை வழியாக வரும் புகையை  வாயைத்திறந்து எல்லா பற்களிலும் படும் படி மூச்சை அடக்கிக் கொண்டு ஆவி பிடிக்கவும்.

புகையை வாயுடன் நிறுத்திக்கொள்ளவும். வாய் வழியாக சுவாசிக்க கூடாது.

மீண்டும் அரிவளை பழுக்கக் காய்ச்சி 2,3 தடவை செய்யவும். 

பின் தட்டில் உள்ள நீரில் பார்க்கவும். பல் சொத்தை  புழுக்கள் அதில் விழுந்து இறந்து கிடப்பதை காணலாம்.

இதனை தொடர்ந்து 3 நாட்கள் செய்யவும். நல்ல பலன் கிடைக்கும்.

பல்வலி,அரணை வீக்கம் குறைந்து முற்றிலும் குணமாகிவிடும்.

Saturday, April 28, 2018

பேரிக்காயின் நன்மைகள்

ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் பேரிக்காயில் அதீத நன்மைகள் அடங்கியுள்ளன. நாம் மேற்கத்திய பழங்களின் மீது கொண்ட ஈர்ப்பால் நம் நாட்டு பழங்களை அதிகமாக கண்டுகொள்வதில்லை. பேரிக்காயில் சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் பஞ்சம் இல்லை என்றே கூறலாம்.

இந்த பழம் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகளும் அடங்கியுள்ளன. 

1. வாய்ப்புண் மற்றும் வயிற்று புண்:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

2. இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

3. சிறுநீரக கல்:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. உடல் சூட்டைத் தணிக்கும்.

5. இரும்பு சத்து:

குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

6. வயிற்றுப் போக்கு:

நாம் சாப்பிடும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் 
போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

7. கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

Friday, April 20, 2018

நகங்கள் பராமரிப்பு | NAIL MAINTENANCE




காரணங்கள்:

நகங்கள் ஆரோக்கியமாக வளர அவை உறுதியுடன் இருத்தல் மிக மிக அவசியம். அவ்வாறு இல்லையெனில் மிகவும் கடினம். மேலும் உடையும் தன்மை கொண்ட நகங்கள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம். இதற்கு பல காரணங்கள் உள்ளன அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை, தோல் சம்பத்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோலழற்சி, இரத்த சோகை, பூஞ்சை தொற்று என அடுக்கி கொண்டே போகலாம்.

செய்ய வேண்டியது:

 1. பயோட்டின் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், முட்டை, தக்காளி, பாதாம், காலிஃபிளவர், பருப்புகள், ஸ்ட்ராபெர்ரி, சோயாபான்ஸ், பால் போன்ற உணவுகளை உண்ண வேண்டும். தேவைபட்டால் உங்கள் மருத்துவரைப கலந்தாலோசித்து பிறகு பயோட்டின் உணவுகளை உண்ணலாம். 

2. பயோட்டின் நிறைந்த உணவுகள் மட்டும் அல்லது ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளான மீன், பால் பொருட்கள், இறைச்சி, விதைகள் மற்றும் கொட்டைகள், கீரை மற்றும் காய்கறிகள் என ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். 

3. தினமும் வாசலின் கொண்டு நகங்களை மசாஜ் செய்யுங்கள்.

4. தினமும் உடற்பயிற்ச்சி செய்யுங்கள், இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து நகங்கள் எப்பொழுதும் புது பொலிவுடன் இருக்கும். 

5. குறிப்பிட்ட இடைவேளையில் நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள்.

6. சிறந்த தயாரிப்பு மற்றும் தரமான நக பூச்சுகளை பயன்படுத்துங்கள்.

7. நகங்களை சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டுங்கள் தன்னால் வைட்டமின் டி நகங்களுக்கு எளிதாக கிடைக்கும். 

8. நிறைய தண்ணீர் குடியுங்கள். 

9. ஃக்யுடிசெல்சை வெட்டி எடுக்காமல் உள்ள தள்ளி விடுவது நோய் தொற்றை குறைக்கும். 

10. ஃக்யுடிசெல்சை ஈரப்பதத்துடன் வைத்திருக்க அதற்கான கிரீம் உபயோக படுத்துங்கள். 

11. நகங்களை மேல் பகுதியை தேய்த்து சுத்தமாக வையுங்கள், இதனால் நகம் உடைவதை தடுக்கலாம். 

12. வெளியில் செல்லும் போது, அதிக நேரம் நீரை கையாளும் பொழுது, ரசாயன பொருட்களை தொடும் பொழுது கையுறைகளை பயன்படுத்துங்கள்.

செய்யக்கூடாதவை:

1. அதிக நேரம் நீரை கையாளுதல் மற்றும் ரசாயன பொருட்களை கையாளுதல் ஆகியவற்றை தவிர்க்கவும். 

2. அசிட்டோன் மற்றும் பார்மால்டிஹைடு போன்ற ரசாயனம் கொண்ட நக பூச்சுகளை தவிருங்கள். 

3. செயற்கையான நகங்கள் உபயோகிப்பதை தவிருங்கள். 

4. ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிடைசர் நகங்களின் ஈரப்பதத்தை எடுத்துவிடும் எனவே அவற்றை தவிருங்கள். 

5. நக பூச்சு நீக்கிகளை அதிகமாக உபயோகபடுத்த வேண்டாம் . 

6. கடைசியாக, நகங்களை கடிப்பதை முற்றிலுமாக விட்டு விடுங்கள், இது உங்கள் நகங்களுக்கு மட்டும் அல்ல உடலுக்கும் தீங்கானது.


Friday, April 13, 2018

பாத வெடிப்புகளை போக்க

நல்லெண்ணெய்:

பாதங்களில் நல்லெண்ணெய்யை தடவி விடுங்கள். எண்ணெய் சருமத்தில் உறிஞ்சும் வரை மென்மையாக மசாஜ் செய்யவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன் இதனை செய்யலாம். நல்லெண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சியும் ஈரப்பதமும் தருகிறது. சருமத்தை மிருதுவாக்கி, மென்மையாக்குகிறது. இதனால் வெடிப்புகள் விரைவில் மறைகிறது.

தேங்காய் எண்ணெய் : 

உங்கள் பாதங்களில் தாராளமாக தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். தடவிய பின் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். காலையில் வழக்கம் போல் கழுவிக் கொள்ளுங்கள். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து விடும். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. வறண்ட சருமத்தை மாயச்ச்சரைஸ் செய்து, இறந்த செல்களை போக்குகிறது. சருமத்தின் ஆழத்திற்குள் சென்று ஊடுருவி, புத்துணர்ச்சியைத் தருகிறது.

பேக்கிங் சோடா :

ஒரு டப்பில் தண்ணீர் வைத்து அதில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். பேகிங் சோடா கரைந்தவுடன் உங்கள் பாதங்களை அந்த நீரில் ஊறவைக்கவும். 10-15 நிமிடம் கழித்து கால்களை படிகக்கல்லால் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். பிறகு சுத்தமான நீரில் கால்களைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். பொதுவாகவே பேகிங் சோடாவில் அழற்சியை போக்கும் தன்மை இருப்பதால் , சருமத்தின் இறந்த செல்களை அழித்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

கற்றாழை:

வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு கால்களை துடைத்து நன்றாக காய வைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை கால் பாதங்களில் தாராளமாக தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து இதனை செய்து வரலாம். நல்ல மாற்றம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யலாம். வறண்ட சருமத்தை மிருதுவாக மாற்ற கற்றாழை உதவுகிறது. சருமத்தில் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து, வெடிப்புகளைப் போக்குகிறது. கற்றாழையில் இருக்கும் அமினோ அமிலங்கள் சருமத்தின் மேன்மையை அதிகரிக்கும்.

வைட்டமின் ஈ:

எண்ணெய் வைட்டமின் ஈ மாத்திரையில் துளையிட்டு அதன் எண்ணெய்யை வெளியில் எடுத்துக் கொள்ளவும். பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் இந்த எண்ணெய்யை தடவவும். ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம். வைட்டமின் ஈ எண்ணெய், சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் பாதங்கள் மென்மையாக மாறுகிறது.

Friday, April 6, 2018

நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்

1.நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால் வாயுத் தொல்லை அதிகமாக இருபத்தற்கான அறிகுறிகளாம்.

2.விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றி இருப்பதற்கான அடையாளமாகும்.

3.உடலில் போதிய இரத்தம் இல்லையென்றால் கை விரல் நகங்கள் வெளுத்துப்போய் காணப்படும்.

4.விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் இரத்தத்தில் நிக்கோடின் விஷம் கலந்திருப்பதிற்க்கான அறிகுறியாகும்.

5.நகங்கள் சற்று உப்பி காணப்பட்டால் மூச்சு சம்மந்தமான நோய்கள் மற்றும் ஆஸ்துமா வருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு.

6.விரல் நகங்கள் சற்று நீல நிறமாக தென்பட்டால் இதயம் பலவீனமாக இருப்பதற்கு அடையாளமாகும்.

7.நகங்கள் மிகவும் சிவப்பாக இருந்தால் உட்லில் இரத்தத்தின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதை காட்டுகிறது இவர்களுக்கு இரத்த கொதிப்பு வருவதற்கு வாய்புகள் உண்டு.

8.நகங்களில் சொத்தைகள் காணப்பட்டால் இவர்களுக்கு போதிய ஊட்ட சத்து இலை என்று அர்த்தம்.

9.லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல இரத்த ஒட்டத்தை குறிக்கும்.

Monday, April 2, 2018

சப்பாத்தி கள்ளி (நாகதாளி)-யின் பயன்பாடுகள்

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளிச்செடியை ஏன் பயன்படுத்த தவறினோம்?


புற்றுநோய் கட்டிகள், கட்டிகள் உடலில் ஏன் உருவாகிறது? நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. டிபன்ஸ் மெக்கானிசம் எனப்படும் உடல் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன நமது உடலுக்குள் நுழையும் நூண்னுயிரிகளை இரத்த அணுக்கள் சண்டையிட்டு அழித்து விடுகின்றது இந்த கழிவுகள் தோலின் வழியாக வெளியேற்ற படுகின்றன. இந்த கழிவுகள் வியர்வை துவாரங்களை அடைத்து உடலில் கட்டிகளை உண்டு பன்னுகிறது.... இந்த கழிவுகள் சிறிது சிறிதாக திரண்டு பெரிதாகி சிவந்து,உடைந்து,சீழாக வெளியேறிய பின்பு புண்ணாக மாறி உடல் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாக புண் ஆறி விடுகிறது இது தான் இயற்கையான நிகழ்வு அதாவது கிருமிகளை கிருமிகளே அழித்து உடலில் இருந்து வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது தோலின் தன்மையை கெடுக்கும் சன்ஸ்கிரின் லோசன் மற்றும் அதிகப்படியான கிரீம்களை பயன்படுத்தும் அமெரிக்கா ஐரோப்பியா நாடுகளில் அதிகப்படியான புற்றுநோய் உருவாகிறது என்பதற்கான காரணத்தையும் புரிந்து கொள்ளலாம்....


நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது இதில் விட்டமின் B மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுத்துவதை நான் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இது எனது அனுபவத்தில் உணர்ந்தது. இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாவதையும் நான் அறிவேன்.

நாகதாளி(சப்பாத்தி கள்ளி)-யின் பயன்பாடுகள்:

1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

4. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி(Enlargement of Spleen) என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் Extract உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது என்பதையும் உணருவோம் . சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

உலகின் மிகச்சிறந்த இயற்கை உரம் சப்பாத்தி கள்ளி என்றால் மிகையாகாது.

தென்னை மரத்தை சுற்றி இரண்ட்டிக்கு குழி எடுத்து அதில் சப்பாத்தி கள்ளியின் மடல்களை வெட்டி பரப்பி இதன்மீது கொஞ்சம் கல்உப்பையும் அடுப்பு கரியையும் போட்டு மண் மூடி விட ஆறு மாதத்தில் தென்னை மரம் கருகருவென்று இருப்பது மட்டுமின்றி தென்னம் பிஞ்சு உதிர்வது அப்படியே மட்டுபடும் ஒரு வருடத்தில் சுமார் 300 தேங்காய் வரை காய்க்கும் தென்னையை தாக்கும் பலவிதமான நோய்கள் நெருங்கவே நெருங்காது இதுவும் அனுபவ ரீதியான உண்மை.

நிலங்களில் இதனை பயன்படுத்துவதில் உள்ள சிரமம் இதில் உள்ள கூர்மையான முட்கள் தான் அதனை போக்க எளிய வழிமுறை. வெட்டி போடபட்ட மடல்களின் மீது எள்ளுபுண்ணாக்கை தூவ ஒரு வாரத்தில் முட்கள் இருந்த இடம் தெரியாமல் அழுகிவிடும் பிறகு அத்தனை வயல்களிலும் பயன்படுத்தி மண்ணை வளமாக்கி கொள்ளலாம்.

ஆடு மாடு மேய்க்கும் போது கால்களில் இந்த முள் ஆழமான சென்று விடும் அப்பொழுது எள்ளை அரைத்து முள் உள்ள இடத்தில் கட்ட ஒரிரு நாளில் தூள் தூளாக வந்து விடும்.

தென்அமெரிக்க பழங்குடியினர் இதனை உணவு பொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் Tunas என்ற பெயரில் இதன் பழங்கள் விற்க்கபடுகிறதாம்.

இவ்வளவு சிறப்பான சப்பாத்தி கள்ளி பழத்தை நாமும் பயன்படுத்த முயல்வோம் ஏனெனில் இன்று புற்றுநோய் ஓர் பயமுறுத்தும் வகையில் உருவெடுத்து வருகிறது. இந்த பழத்தில் இருக்கும் Flavonoid,Polyphenol போன்ற வேதி பொருட்களால் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்பு உள்ளது என மேலை நாட்டு ஆய்வுகள் கூறுகிறது இந்த பழம் Antioxidant ஆக செயல்பட்டு உடல் செல்களுக்கு அதிகபடியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது .

நமக்கு தெரியும் இரத்த ஒட்டம் தடைபெற்ற இடங்களில் தான் புற்றுநோய் செல்கள் உருவாகிறது உடலில் உள்ள செல்களுக்கு அதிகபடியான ஆச்சிஜன் தேவை புற்றுசெல்களுக்கு சிறிதளவு ஆச்சிஜனே போதும். அதனால் தான் இவைகள் பல்கி பெருகி வருகிறது இந்த பழத்தில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் செல்களுக்கு ஆக்சிஜனை அதிகரித்து புற்றுசெல்களை அழிக்க உதவி புரிகிறது.

எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் சப்பாத்தி கள்ளி பழம். கொஞ்சம் மெனகெட்டாலே போதும். இது நமக்கான உணவு மருத்துவம். செலவில்லாத சிறந்த உணவு மருந்து.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...