Thursday, April 19, 2018

முத்திரைத்தாள் அச்சகத்தில் 35 இளநிலை அலுவலக உதவியாளர் பணி

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள 35 இளநிலை அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Office Assistant

காலியிடங்கள்: 35

சம்பளம்: மாதம் ரூ. 8,350 - 20,470.

தகுதி: 

இளநிலை பட்டத்துடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. 

இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:

 ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.spmcil.com/Interface/Home.aspx

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...