இந்திய ராணுவத்துக்கு தேவையான விமானங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பு, பழுதுபார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (எச்எஎல்) நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 240
1. பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் - 137.
2. பொறியியல் பட்டதாரிகளுக்கு -103.
தகுதி:
பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ருமென்டேசன் போன்ற துறைகளில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: வரும் 23 மற்றும் 24 தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெறுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துவிட்டு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment