Tuesday, May 1, 2018

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு

தடய அறிவியல் துறையில் காலியாகவுள்ள ஆய்வக உதவியாளர் பணியிட எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.


தடய அறிவியல் துறையில், 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. 

சென்னை உள்பட எட்டு தேர்வு மையங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.tnpsc.gov.in & www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில் தயாராக உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...