Thursday, May 17, 2018

தலைகீழாக விழும் கோபுர நிழல் | விருபாட்சா கோயில்



இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த செய்திதான். நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது. அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.




இந்த கோயிலில் கோபுரதுங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் பெரும்பாலும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது.


கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இந்த மர்மம் என்னவென்று தெரியாமல் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதன் மத்தியில் அமைந்துள்ள மைய மண்டபம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 1510ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக தெரிகிறது.




ஹம்பி பகுதியில் இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் இருந்ததாகவும், அதையெல்லாம் படையெடுத்து வந்தவர்கள் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விருபாட்சா கோயிலின் சிறப்பு எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இந்த கோயிலை எதும் செய்யமுடியவில்லையாம். 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சி தருகிறது.

ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இயங்கி வரும் இந்த கோயிலில் இதுவரை எந்த இடையூறுகளும் ஏற்பட்டதில்லையாம். இந்தியாவின் வெகுகாலமாக இயங்கிவரும் ஒரே கோயில் என்று வழங்கப்படுகிறது இந்த விருபாட்சா கோயில்.




இதன் அமைவிடம் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் இந்த சிறிய கோயில் துங்கபத்திரை நதிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. 

இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்த கோயில் சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதற்கான உறுதிப்பாட்டை தருகின்றன. அதன் பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...