Monday, May 21, 2018

108 ஆம்புலன்ஸ் சேவை பணிகளில் 116 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 104 ஆலோசனை மையம் மருத்துவச் சேவைகளை ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உள்பட தமிழகத்தின பல்வேறு மாவட்டங்களில் உள்ள 7 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், அவசரகால உதவியாளர், தொலைபேசி கட்டுப்பாட்டு மைய ஊழியர் ஆகிய பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 30 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் 335 பேர் பங்கேற்றனர். இவர்களில் அவசரகால உதவியாளர் பணியிடங்களுக்கு 65 பேரும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 51 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...