Thursday, May 31, 2018

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் மாலுமி வேலை

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இந்திய இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது "செய்லர் பிப்ரவரி-2019" என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையிலான மாலுமி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் டூ முடித்த இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: செய்லர் பிப்ரவரி-2019

வயது வரம்பு: 1.2.1998 மற்றும் 31.1.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் அடங்கிய அறிவியல் பிரிவில் பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் அளிக்கப்படும். மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1  பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...