உத்தரபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு தெலங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வரும் என்.எப்.எல் என அழைக்கப்படும் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான தேசிய உர நிறுவனத்தின் பதிண்டா, பானிபட், விஜய்பூர், நங்கல் போன்ற கிளைகளில் காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 129
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineering Assistant - 127
தகுதி: பொறியியல் துறையில் Production, Mechanical, Electrical Instrumentation, Electrical&Electronics போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400
பணி: Fireman - 02
தகுதி:\ பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.235 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டப்பயிற்சி, எடை தூக்குதல், கயிறு ஏறுதல், பார்வைத்திறன் சோதனை போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல் தகுதி சோதிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nationalfertilizers.com இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2018
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2018
மேலும் முழுமையான விவரங்களுக்கு : http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/AddNONEXECUTIVES.pdf
No comments:
Post a Comment