நால்கோ (NALCO) என அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாக உள்ள 115 பட்டதாரி என்ஜினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 115. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 60 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 30 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 17 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 8 இடங்களும், மாற்றுத் திறனாளி களுக்கு 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் - 54
2. எலக்ட்ரிக்கல் - 32
3. மெட்டலர்ஜி - 18
4. எலக்ட்ரானிக்ஸ் - 05
5. இன்ஸ்ட்ருமென்டேசன் - 06
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெட்டலர்ஜி போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவர்கள் கேட் -2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 22.05.2018 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கேட் மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.nalcoindia.com/GET-2018%20Advt..pdf
No comments:
Post a Comment