Monday, May 28, 2018

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் | 300 கி.மீ. மைலேஜ்

 Honda _ Jazz


2020ம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சனை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் பேட்டரி முழு சார்ஜில் இருந்தால் சுமார் 300 கி.மீ. வரை ஓடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள் குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எலெக்ட்ரிக் கார்களால் பல நன்மைகள் கிடைப்பதால் இன்று ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்துள்ள பெரும் நிறுவனங்கள் வரும் காலம் குறித்த பயம் வந்து விட்டது.
எலெட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது மிக சுலபமாக இருப்பதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரும் ஜாம்பவான்களாக விளங்குள் நிறுவனங்களில் வாகனங்களுக்கு போட்டியாக வாகனங்களை தயாரித்து சவால் விட துவங்கி விட்டனர்.

இதை சமாளிக்க ஹோண்டா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி திட்டம் அனைத்தும் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. வரும் 2020ம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தின் படி ஏற்கனவே மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பெயரைபெற்றுள்ள ஜாஸ் காரில் எலெக்ட்ரிக் வேரியன்டை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் குறித்து தற்போது ஹோண்டா நிறுவனம் திட்டமிட்ட தொழிற்நுட்பத்தை இந்த காரில் பொருத்தும் பட்சத்தில் இந்த கார் முழு பேட்டரி சார்ஜில் சுமார் 300 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அந்நிறுவனம் சீனாவை சேர்ந்த கான்டெம்ரரி அம்பெரெக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் கார்களுக்கான பேட்டரியை தயாரித்து வழங்கவிருக்கிறது.

மேலும் சீனாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனை செய்தால் பேட்டரி தயாரிப்பிலும் சீன அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போது விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் காரின் மாடல்கள் எதுவும் மாற்றப்படுகிறதா அல்லது இதே மாடலில் எலெட்ரிக் பாகங்கள் பொருத்தப்படுகிறதா என்பது குறித்து தகவலை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

தற்போது வந்துள்ள தகவலின் படி சீனாவில் இந்த காரை இந்திய மதிப்பின் படி ரூ16.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த கார் தயாரிப்பிற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது ஆண்டிற்கு 10,000 கார்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் எச்ஆர்-வி எஸ்யூவி கார்களை பிஜிங்கில் நடந்த ஒரு ஆட்டோ எகஸ்போவில் கண்காட்சிக்கு வைத்தது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என பேசப்படுகிறது. இந்த காரை சீனாவின் வென்சர் மார்க் என்ற நிறுனவத்துடன் ஒப்பந்தமிட்டு தயார் செய்துள்ளது.

தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் ஒரு, இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே உள்ளன. இந்த கார் முழுவதும் கலிபோர்னியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த காரில் 25.5 கிலோ வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 300 என்எம் டார்க் திறனை வழங்ககூடியது. முழு பேட்டரி சார்ஜில் 129 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.

இந்த காரை இந்தியாவில் விற்பனை செய்வது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வேரியன்டை வெளியிட அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...