பழமொழி:
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்:
ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.
தமிழ் விளக்கம்:
கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு.
வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை.
சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது.
புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment