Saturday, May 12, 2018

மும்பை கப்பல்தளத்தில் தீயணைப்புவீரர் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கட்டும் தளமான மும்பை கப்பல்கட்டும் தளத்தில் காலியாக உள்ள 95 தீயணைப்புவீரர் (கிரேடு 1, 2 ) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 48 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 26 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 14 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியுடன் நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ அளவும், விரிந்த நிலையில் 85 செ.மீ. அளவும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.bharatseva.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018

முழுமையான விவரங்களுக்கு : www.bharatseva.com

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...