Wednesday, May 2, 2018

ஸ்டேட் வங்கியில் 2 ஆயிரம் அதிகாரிகள் வேலை

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பாரத ஸ்டேட் வங்கி. நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக தற்போது 2 ஆயிரம் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தமுள்ள 2 ஆயிரம் பணியிடங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பணி: Probationary Officer (PO)

காலியிடங்கள்: 2000

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 01.04.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.04.1988 மற்றும் 01.04.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இரு தேர்வுகளை கொண்டதாக இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இந்திய இளைஞர்கள் www.sbi.co.in அல்லது www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.sbi.co.in/webfiles/uploads/files/15214699781_SBI_PO_2018_ENGLISH.pdf

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...