Thursday, May 3, 2018

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் சிறப்புப் பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தகுதியுடையவர்கள் இதில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைத் தொழில் சேவை மையம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச சிறப்புப் பயிற்சிகள், கணினி மென்பொருள் பயிற்சி ஆகியவற்றை வழங்கவுள்ளது.

சிறப்புப் பயிற்சி: பயிற்சிக் காலம் 11 மாதங்கள். மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

கணினி பயிற்சி: "ஓ" அளவிலான ஓராண்டு கால கணினி மென்பொருள் இலவசப் பயிற்சி பெறுபவருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 , + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் பெற கடைசி நாள் மே 7, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 8. 

மேலும் விவரங்களுக்கு, 

சார் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, 
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு இயக்குநரகம், 
56 சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-4 , 
தொலைபேசி எண். 044-24615112 -ஐ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...