Friday, May 11, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி மே 14-ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெறுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சென்னைப் பிரிவு சார்பில், குறுகியகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. உடல்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கேட்கும் திறனற்றவர்களுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல், தையல் கலை, வீட்டு உபகரணங்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், புக் பைண்டிங், சில்லறை விற்பனைப் பிரிவு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி: செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சிக்கு உடல் குறைபாடு உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 15 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இந்த பயிற்சி வரும் 14-ஆம் தேதி அளிக்கப்படும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் நடைபெறும்.

மே 17-இல் சில்லறை விற்பனைப் பிரிவு பயிற்சி: சில்லறை விற்பனைப் பிரிவுப் பயிற்சியில் மாற்றுத் திறனாளிகளும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை. 8- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.

இவர்கள் மே 17-ஆம் தேதி சாந்தோம் ஹெல்ப் டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம். குறைந்த அளவு இடங்கள் மற்றும் விடுதி வசதி உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் மே 14-க்கு முன்பாக மையத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...