இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரயில்வே. கொங்கன் ரயில்வே கார்பரேசன் மூலமாக இது கட்டமைக்கப்பட்டு, இந்தியா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குக் கடற்கரை வழியாக கர்நாடகாவில் உள்ள மங்களூரில் இருந்து கோவா வழியாக மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை வரையிலான தனது சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இது மற்ற ரயில்வே மண்டலங்களின் கீழ் வருவதில்லை.
தற்போது இந்த கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள 100 டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 100
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Track man - 50
பணி: A pman -07
பணி: Khalasi Electrical - 02
பணி: Khalasi S &T - 08
பணி: Khalasi Mechanical - 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 18 முதல் 31க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலமும் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2018
மேலும் முழுமையான விவரங்களுக்கு: http://www.konkanrailway.com/uploads/vacancy/1527051865Notification_5-2018.pdf
No comments:
Post a Comment