Monday, May 14, 2018

ராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 40 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து வரும் 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer (Technical Graduate Course (TGC-128) (Jan.2019)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் 157.5 செ.மீட்டர் உயரமும், உயரத்திற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும். 2.4 கி.மீ. தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.05.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: www.joinindianarmy.nic.in

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...