மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள 670 ஐ.டி. உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 670
பணி: I.T.Assistant
தகுதி: கணினி அறிவியல் துறையில் பிசிஏ, எம்சிஏ, எம்.எஸ்சி., பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி பிரிவில் பி.இ., அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் ஒரு ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேச, எழுத தெரிந்திருப்பதுடன் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 20 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 80 சதவீதம் பிழையின்றி தட்டச்சு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,332 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: தட்டச்சு தேர்வு, குழு விவாதம் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் பற்றிய விவரம் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.icsil.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://icsil.in/wp-content/uploads/2018/04/IT-Assist.-Adv-.pdf
No comments:
Post a Comment