Tuesday, May 15, 2018

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் குரூப் 'ஏ' குரூப் 'பி' வேலை

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மையத்தில் காலியாக உள்ள குரூப் 'ஏ 'மற்றும் குரூப் 'பி' உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Sr.Biochemist - 02
பணி: Blood Transfusion Officer - 02
பணி: Scientist.II - 05
பணி: Assistant Blood Transfusion Officer - 02
பணி: Tutor in Nursing - 04
பணி: Scientist-I - 05
பணி: Clinical Psychologist/Psychologist - 04
பணி: Assistant Administrative Officer - 04
பணி: Transplant Co-ordinator - 01
பணி: Medical Social Service Officer Gd.II - 03
பணி: Jr.Engineer (Civil) - 06
பணி: Jr.Engineer (Electrical) - 03
பணி: Ophthalmic Technician Gd.I - 02
பணி: Jr.physiotherapist/Occupational Therapist - 13
பணி: Technical Assistant (ENT) - 02
பணி: Fire Safety Officer - 01
பணி: Assistant Dietician - 04
பணி: Technician (Radiotherapy) Gd.II - 12
பணி: Technical Officer (CWS) - 02
பணி: Social Psychologist - 03
பணி: Life Guard - 01
பணி: Physical Training Instructor - 02
பணி: Technician (Radiology) - 13

வயது வரம்பு: 18-50-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: குரூப் ஏ பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும், குரூப் பி பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.05.2018 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: https://mail.aiims.edu/images/pdf/recruitment/advertisement/recttcell-3-5-18.pdf

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...