பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆர்.எ.சி நிறுவனத்தில் வேலை

ஆர்.எ.சி. நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் - பி, பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டி.ஆர்.டி.ஓ என அழைக்கபடும் ராணுவ பாதுகாப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (ஆர்.எ.சி.) நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் - பி, பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூன் 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 41

பணி: சயின்டிஸ்ட் - பி

வயதுவரம்பு: 01.6.2018 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு :rac.gov.in
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.