செளத் இந்தியன் வங்கியில் சட்ட, பாதுகாப்பு அதிகாரி வேலை

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செளத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்டம் மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணி.
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செளத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்டம் மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Legal Officers

காலியிடங்கள்: 09

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Probationary Security Officers

காலியிடங்கள்: 07

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42.020

தகுதி: பொறியியல் துறையில், இசிஇ, இஇஇ, இன்ஸ்ரூமென்டேசன், பையர் மற்றும் சேப்டி பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத்


விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2018
சதீஷ்குமார் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தளத்தின் நிறுவனர். கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் தொடர்பான பயனுள்ள தகவல்களை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.