Sunday, May 13, 2018

புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ் மற்றும் கிளார்க் வேலை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள 115 செவிலியர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.Admn-1/DR/1(1)/2016

பணி: Nursing Officer

காலியிடங்கள்: 91 (UR-56, OBC-17,SC-7, ST-11)

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிகிரி/டிப்ளமோ முடித்து இந்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 24 இடங்கள் (UR-14, OBC-7, SC-2,ST-1)

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200.

வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் .

வயதுவரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: புதுச்சேரி, திருவனந்தபுரம், சென்னை, கோயம்பத்தூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை.

தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 30.05.2018 தேதிக்குள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசிக்கு ரூ.1500. (எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2018.

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு : https://drive.google.com/file/d/1Iobf_lDr5-6cpAQq8cC0OPRL2rNDf2Bi/view

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...