வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 78.60 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30 -ஆம் தேதி நிலவரப்படி , இதற்கான விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பதிவு மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அவர்களுக்கு அரசுப் பணிகள் அளிக்கப்படும். கடந்த ஏப்ரல் 30 -ஆம் தேதி நிலவரப்படி, தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 78 லட்சத்து 60 ஆயிரத்து 322 ஆக உள்ளது.
இதில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 39 ஆயிரத்து 820 பேரும், 23 வயது வரையுள்ள பட்டதாரி மாணவர்கள் 18 லட்சத்து 93 ஆயிரத்து 812 பேரும், 35 வயது வரையுள்ளவர்கள் 29 லட்சத்து 85 ஆயிரத்து 298 பேரும் பதிவு செய்துள்ளனர்.இதேபோன்று, 36 வயது முதல் 56 வயது வரையில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 345 பேரும், 57 வயதுக்கு மேற்பட்டோர் 6 ஆயிரத்து 47 பேரும் என, மொத்தமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 78 லட்சத்து 60 ஆயிரத்து 322 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment