Sunday, May 20, 2018

அரிய தகவல்கள்

  • கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
  • யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
  • கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்.
  • மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
  • ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயிரினம் - ஈரிதழ்சிட்டு.
  • வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
  • ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
  • பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணி நேரம் பேசியுள்ளார்.
  • அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள்11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
  • ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
  • தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
  • காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்துவிடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது. தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
  • சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
  • விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
  • சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
  • யானை,குதிரை நின்று கொண்டே தூங்கும்.
  • நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
  • டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்.
  • மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
  • எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
  • உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
  • தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.
  •  கத்தரிக்காயின் தாயகம் இந்தியாவே.
  • வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.
  • உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.
  • இந்தியாவில் தமிழில் தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...