இந்திய கடற்படையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ள சமையல்காரர், பரிமாறுபவர், துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான கோர்ஸ் காமென்சிங் ஏப்ரல் 2019 சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு திருமணமாகாத, இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு: 01.4.1998 மற்றும் 31.3.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதி: பத்தாம் வகுப்பு (மெட்ரிகுலேசன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
செப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சைவம் மற்றும் அசைவ உணவு தயாரிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஸ்டீவார்டு பணியாளர்கள், உணவு பரிமாறுதல் மற்றும், உணவு தயாரித்தலுக்கான உதவி பணிகள், ஹவுஸ் கீப்பிங் பணிகளை கவனிக்க வேண்டும்.
ஹைஜீனிஸ்ட் பணியாளர்கள் அறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 15 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இது 15 ஆண்டு காலத்தைக் கொண்ட பணிவாய்ப்பாகும். அதன் பின்னர் தகுதியின் அடிப்படையில் பணி வாய்ப்பு பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.07.2018
மேலும் வயதுவரம்பு சலுகை, உடல் தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய : www.joinindiannavy.gov.in
No comments:
Post a Comment