Friday, June 8, 2018

தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி அமைப்பான தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  10. (ஆண்கள் 5, பெண்கள் 5)

பணி: ஊக்க மருந்து தடுப்பு அதிகாரி (Doping Control Officer) - 10

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயது வரம்பு: 25 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

தகுதி:  Life Science, Medical Science, Nursing, Pharmacology, Physiotherapy, Medical Lab Technology, Biotechnology போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது அவசியம்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Director General National Anti Doping Agency, 
A-Block, Pragati Vihar Hostel, 
Lodhi Road, New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.nadaindia.org/upload_file/document/1527243884.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...