Saturday, June 16, 2018

விண்டோஸ்-இல் தேவையற்ற தேவையற்ற ஃபைல்களை நீக்குவது எப்படி | How To Remove Temporary Files On WIndows

விண்டோஸ்-இல் தேவையற்ற தேவையற்ற ஃபைல்களை நீக்கி மெமரியை அதிகரிப்பது எப்படி?


விண்டோஸ் 10 ஃபால் க்ரியேட்டர்கள் அப்டேட் மற்றும் அதற்கும் புதிய பதிப்புகளில்,

1 - செட்டிங்ஸ் சென்று சிஸ்டம் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

2 - இடது புற மெனுவில் காணப்படும் ஸ்டோரேஜ் அம்சத்தை க்ளிக் செய்யவும். இதே பகுதியில் இருக்கும் மெமரியை எவ்வாறு பெற வேண்டும் (Change how we free up space) என கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3 - இந்த ஆப்ஷனில், முந்தைய விண்டோஸ் 10 இன்ஸ்டாலேஷனை அழிக்கக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி க்ளீன் நௌ (Clean now) பட்டனை க்ளிக் செய்யவும்.

4 - விண்டோஸ் அனைத்து ஃபைல்களையும் சேகரித்து அவற்றை அழிக்கும் வரை காத்திருக்கவும். இந்த பணி நிறைவுற்றதும், விண்டோஸ் சார்பில் திரையில் தகவல் காண்பிக்கப்படும்.

5 - இயங்குதளத்தின் புதிய அம்சமாக ஸ்டோரேஜ் சென்ஸ் இருக்கிறது, எனினும் இது தானாகவே டிசேபிள் செய்யப்பட்டு இருக்கும்.

இந்த பகுதியில் இது என்ன செய்யும் என்றும், இதை எவ்வாறு உங்களுக்கு சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.


முந்தைய பதிப்புகளில் இதை எவ்வாறு செய்யவேண்டும்? 

ஃபைல் எக்ஸ்ப்ளோரர் மூலம் விண்டோஸ் ஃபைல்களை அழிக்க முயற்சித்தால், விண்டோஸ் இயங்குதளம் அதை நிராகரித்து விடும்.

இதனை செய்ய செட்டிங்-களில் சில வேலைகளை செய்ய வேண்டும். 

1 - முதலில் ஸ்டார்ட் சென்று டிஸ்க் க்ளீன்-அப் (Disk Cleanup) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 

2 - டிஸ்க் க்ளீன்-அப் அம்சத்தில் உங்களது சிஸ்டம் டிரைவை தேர்வு செய்ய வேண்டும். இந்த டூல் உங்களது டிரைவில் உள்ள தேவையற்ற ஃபைல்கள் மற்றும் பழைய கேச்சி டேட்டாவை ஸ்கேன் செய்யும், இதில் விண்டோஸ் ஃபைல்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது.

3- டிரைவில் ஸ்கேன் செய்யப்பட்டதில் வெவ்வேறு தகவல்களை பார்க்க முடியும், இதில் ரிசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் கேச்சி என வெவ்வேறு தகல்களை பார்க்க முடியும்.

4- இதில் டெம்ப்பரரி விண்டோஸ் இன்ஸ்டாலேஷன் ஃபைல்ஸ் (Temporary Windows installation files) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். 

5 - நீங்கள் அழிக்க விரும்பும் தகவல்கள் அனைத்தையும் க்ளிக் செய்து, அவற்றை உறுதி செய்ய OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து வரும் ப்ராம்ப்ட்களை உறுதி செய்யவும்.



No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...