Tuesday, June 12, 2018

ஐஐடி மாணவர்கள் 832 பேருக்கு வேலைவாய்ப்பு

வளாகத் தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக வேலைவாய்ப்புகளை சென்னை ஐஐடி மாணவர்கள் நடப்பாண்டில் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2017-18-ஆம் கல்வியாண்டுக்கான வளாகத் தேர்வு முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், சென்னை ஐஐடி மாணவர்கள் 832 பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது வளாகத் தேர்வில் பதிவு செய்த மாணவர்களில் 70 சதவீதமாகும்.

அதேபோன்று, ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள், கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

கடந்த 2015 -16 -ஆம் கல்வியாண்டில் 17 சதவீதமாகவும், 2016-17-ஆம் கல்வியாண்டில் 23 சதவீதமாகவும் இருந்த ஐஐடி ஆராய்ச்சி (பிஎச்.டி.) மாணவர்களின் வளாகத் தேர்வு வாய்ப்புகள் 2017-18-ஆம் கல்வியாண்டில் 36 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எம்.எஸ். ஆராய்ச்சி மாணவர்களுக்கு 2015 -16 -ஆம் கல்வியாண்டில் 59 சதவீதமாகவும், 2016 -17 -ஆம் கல்வியாண்டில் 63 சதவீதமாகவும் இருந்த வளாகத் தேர்வு வாய்ப்புகள், 2017-18 -ஆம் கல்வியாண்டில் 71 சதவீதமாக உயர்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...