Wednesday, June 27, 2018

ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு | Teachers Recruitment Board Certificate of Marks | TRB Certificate of Marks

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், 2017, ஏப்ரல் 30 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 12,260 பேர் எழுதினர்.

இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. 

தங்களின் மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஆர்பி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...