Saturday, June 30, 2018

இந்திய விமானப்படையில் ஏர்மேன் வேலை | CENTRAL AIRMEN SELECTION BOARD | CAREER IN INDIAN AIR FORCE

இந்திய விமானப்படையில் ஏர்மேன் (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல், குரூப்-ஒய் (நான் டெக்னிக்கல்) பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்த திருமணமாகாத இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: ஏர்மேன் (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல்

பயிற்சி: குரூப்-ஒய் (நான் டெக்னிக்கல்)

தகுதி:  குரூப் எக்ஸ் பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ்-டூ (10+2 முறையில்), இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 

அதாவது கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குரூப் ஒய் (நான்-டெக்னிக்கல்) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ்-டூ, இன்டர்மீடியட் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

குரூப்-ஒய் (நான்-டெக்னிக்கல்) மெடிக்கல் அசிஸ்டன்ட் டிரேடு பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் டூ, இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 14.07.1998 மற்றும் 26.06.2002 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உடல்தகுதி: ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் 152.5 செ.மீ. உயரமும், குறைந்தபட்சம் 55 கிலோ எடையும், 5 செ.மீ. விரியும் மார்பளவு திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.airmenselection.cdac.in அல்லது www.careerindianairforce.cdac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 13-முதல் 16-ஆம் தேதி வரை நடக்கும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...