Wednesday, June 13, 2018

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) வேலை

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) , இளநிலை உதவியாளர் ,நூலக உதவியாளர், ஓட்டுநர் வேலை.

பதவி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 02

கல்வித்தகுதி: ஏதேனும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆபிஸ் சாப்ட்வேர் துறையில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருப்பதோடு, தட்டச்சு செய்யவும், கணிப்பொறி இயக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: நூலக உதவியாளர்

காலியிடம்: 1

கல்வித்தகுதி: லைப்ரரி சயின்ஸ்/ இன்ஃபர்மேஷன் சயின்ஸ் இளநிலைப் பட்டம் முடித்திருப்பதோடு, தேசிய அளவிலான ஆய்வு நிறுவனம் / பல்கலைக்கழகம் / கல்லூரியில் குறைந்தபட்சம் 4 ஆணடுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.

பதவி: ஓட்டுநர்

காலியிடம்: 1

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் சிறு, சிறு பழுதுபார்க்கும் வேலையும் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் ஐந்தாண்டுகள் முன் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mids.ac.in என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: 

The Director, 
Madras Institute of Development Studies, 
79, Second Main Road, Gandhi Nagar, 
Adyar, Chennai 600 020.

மேலும் விவரங்களுக்கு: www.mids.ac.in/recruit2018.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 15-06-2018.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...