Friday, June 15, 2018

புதுச்சேரி ஜிப்மர் தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி ஜிப்மர் செவிலியர் அதிகாரிகள், எல்டிசி பணிகளுக்கான இணையதளத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை மாலை வெளியாகின.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரிகள், இளங்கலை எழுத்தர் (எல்டிசி) பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு இந்தியா முழுவதும் உள்ள 59 மையங்களில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் தேர்வு கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது.

ஜிப்மரில் உள்ள 24 எல்டிசி பணியிடங்களுக்கு 4,914 பேரும், 91 செவிலியர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு 12,972 பேரும் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் www.jipmer.puducherry.gov.in  /  www.jipmer.edu.in என்ற ஜிப்மர் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியாகின.

எல்டிசி பணியிடங்களுக்கான ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் திறன் சோதனைக்கான Skill Test தேர்வு 1:5 விகிதாசாரப்படி ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும். செவிலியர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு 1:2 என்ற விகிதாசாரப்படி ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்.

சோதனை திறன் தேர்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எடுத்தவர வேண்டிய சான்றிதழ்கள் குறித்த விரிவான விவரம் ஜிப்மர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...