Saturday, June 30, 2018

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய கடற்படையில் வேலை | CAREERS IN INDIA NAVY

இந்திய கடல் எல்லையை பாதுகாக்கும் படையான கடற்படையில் ”யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.) கோர்ஸ் காமென்சிங் - ஜூன்-2019” என்ற பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேவல் ஆர்கிடெக்சர் பிரிவில் மட்டும் பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

பயிற்சி: ”யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.) கோர்ஸ் காமென்சிங் - ஜூன்-2019”


வயது வரம்பு: 02.07.1995 மற்றும் 01.01.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் மற்றும் இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் எக்சிகியூட்டிவ் பிரிவு பயிற்சிக்கும், மெக்கானிக்கல், மரைன், ஆட்டோமோடிவ், மெக்கட்ரானிக்ஸ், மெட்டலர்ஜி, ஏரோனாட்டிக்கல், ஏரோஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் உள்பட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் டெக்னிக்கல் பிரிவு பணிக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உடல்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். 

எக்சிகியூட்டிவ் விண்ணப்பிப்பவர்களின் பார்வைத்திறன் 6/12 என்ற அளவுக்குள்ளும், டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பிப்பவர்கள் 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:  சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி.) நடத்தும் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள், நுண்ணறிவுத் தேர்வு மற்றும் படங்களை புரிந்து கொள்ளுதல், கலந்துரையாடுதல், உளவியல் தேர்வு, குழு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ தேர்வுக்குப் பின்னர் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.


பயிற்சியிலும் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் அளிக்கப்படும். 14 ஆண்டுகள் கொண்ட ”ஷாட் சர்வீஸ் கமிஷன்”; பணியாகும். ஜெனரல் சர்வீஸ் பணியிடங்கள் மட்டும் நிரந்தர பணிவாய்ப்பாகும். சப்-லெப்டினன்ட் முதல் கமாண்டர் பதவி வரை பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்  www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...