திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 28 தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தற்காலிக பேராசிரியர்
மொத்த காலியிடங்கள்: 28
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. ஆர்கிடெக்சர் - 5
2. கம்யூட்டர் சயின்ஸ் - 1
3. கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினியரிங் - 5
4. ஹியூமனிட்ஸ் மற்றும் சோஷியல் சயின்ஸ் - 2
5. மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் - 1
6. மெக்கானிக்கல் என்ஜினியரிங் - 4
7. மெட்டாலர்ஜிகல் அண்ட் மெட்டீரியல் சயின்ஸ் என்ஜினியரிங் - 1
8. இயற்பியல் - 3
9. புரடெக்சன் என்ஜினியரிங் - 6
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிப்பது விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.nitt.edu/tmpfaculty என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்ததைப் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
Registrar,
National Institute of Technology,
Tiruchirappalli - 620 015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.06.2018
மேலும்முழுமையான விவரங்களுக்கு: https://recruitment.nitt.edu/tmpfaculty/advt/TF%20General%20Instructions%20and%20Informations.pdf
No comments:
Post a Comment