Sunday, July 15, 2018

முதல் ஆட்டோ பவுன்சிங் ஃப்ளாஷ். கேமரா கேட்ஜெட் | WORLD'S FIRST AUTO BOUNCING FLASH GADGET FROM CANON


Canon DSLR

இந்த ஃப்ளாஷின் தலைப் பகுதி ஆட்டோ முறையில் மேலும் கீழுமாக 120° டிகிரி அளவிற்கு இயங்கவும் மற்றும் இடது வலதாக 180° டிகிரி அளவிற்குச் சுழலும் திறன் கொண்டது. உயர் செயல் திறன் கொண்ட CPU இதில் பொருத்தப்பட்டுள்ளது.


DSLR கேமரா தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான கேனான் நிறுவனம் தன் புதிய படைப்பான உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷை அறிமுகப்படுத்தியுள்ளது. புதியதாகப் புகைப்படங்கள் எடுக்கப் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கும், ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்கும் ஏற்ற வகையில் செயற்கை நுண்ணறிவு (Auto Intelligent) பௌன்ஸிங் முறையில் வெளியாகியுள்ளது கேனான் ஸ்பீடுலைட் 470 எஸ் ஃப்ளாஷ். இதுவே உலகின் முதல் ஆட்டோ பௌன்ஸிங் பிளாஷ்.


இதற்கு முன்னதாக வெளிவந்த கேனான் ஸ்பீடுலைட் 430 EX III-RT, ஸ்பீடுலைட் 580 ex ii, marrum ஸ்பீடுலைட் 600 EX II-RT, இவை அனைத்தும் மேனுவல் (manual) மற்றும் E-TTL முறைகளைக் கொண்டது. இந்த வகை ஃப்ளாஷ்களை தலைப் பகுதியை நம் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் மேலும் கீழுமாக திருப்பிக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த ஸ்பீடுலைட் 470 எஸ் ஃபிளாஷ் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. தானாகவே சுவரில் அல்லது மேற் கூரையுடனான தூரத்தைக் கணக்கிட்டு அதன் தானியங்கி திறன் மூலம் ஃப்ளாஷ் செயல்படுகிறது. ஸ்பீடுலைட் 470 எஸ் ஃபிளாஷ் முழுக்க முழுக்க இண்டோர் போட்டோ ஷூட்டுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.


இதன் முக்கிய அம்சங்கள்:

இந்த ஃப்ளாஷின் தலைப் பகுதி ஆட்டோ முறையில் மேலும் கீழுமாக 120° டிகிரி அளவிற்கு இயங்கவும் மற்றும் இடது வலதாக 180° டிகிரி அளவிற்குச் சுழலும் திறன் கொண்டது. உயர் செயல் திறன் கொண்ட CPU இதில் பொருத்தப்பட்டுள்ளது. CPU வேகமாக, தூரத்தின் அளவுகளைக் கணக்கிட்டு செயல்படுகிறது.

முழுமையாகத் தானியங்கி (AI.B Full-auto) மற்றும் அரை தானியங்கி (AI.B Semi-auto) பவுன்ஸ் முறைகளிலும் செயல்படவும், முன்னால் இருக்கும் பொருளுக்கு ஏற்றார் போல் பவுன்ஸ் கோணத்தை கணக்கிட்டுச் செயல்படும் விதத்திலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னாள் இருந்த ஃப்ளாஷ்களை விட முழுவதும் தானியங்கி முறையில் ஜூம் செட்டிங் செயல்படுகிறது. ஜூம் முறையில் ஓளி செலுத்தும் வரம்பு 24-105mm2. இந்தச் செயல்முறை ஃப்ரேம்களின் நான்கு மூலைகளிலும் ஒளியைச் செலுத்துவதற்கு உதவுகிறது. வைட் ஆங்கிள் லென்ஸ் பயன்படுத்தினாலும் கேமராவுக்கு முன்னால் இல்லாத பொருட்களின் மீதும் இதன் வெளிச்சம் பரவலாக கிடைக்கிறது.

மற்ற ஃப்ளாஷ்களை காட்டிலும் அதிகப்படியான வெளிச்சத்தைச் செலுத்தக்கூடிய திறன் கொண்டது. Gn 47 (ஐஎஸ்ஓ 100 / மீட்டர்) ஒளியின் செயல் திறன் மிகுந்த தாராளமான மற்றும் மென்மையான வெளிச்சத்தை வழங்குகிறது.




சமீபத்திய தொழில்நுட்பம் பெரும்பாலும் கொஞ்சம் பழைய மாடல்களில் பொருத்துவதில் சில சிக்கல்களோடு வருகிறது, மேலும் EOS ரெபெல் T5 / 1200D, EOS ரெபெல் SL1 / 100D, EOS ரைபிள் T5i / 700D, EOS 70D, EOS 6D, EOS 5D Mk III மற்றும் EOS-1D X உட்பட 2014-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கப்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தும்போது தானாக AI தானியங்கி முறையில் கிடைக்காது.

புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்த EOS ரெபேல் T6 / 1300D மற்றும் mirrorless EOS M3, EOS M5 மற்றும் EOS M6 கேமராக்களில் புகைப்படங்கள் எடுக்கும்போது நீங்கள் அரை தானியங்கி (AI.B Semi-auto) முறையில் AI பவுன்ஸ் பயன்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...