Tuesday, July 3, 2018

மத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் வேலை | CAREERS IN MINISTRY OF LABOUR & EMPLOYMENT

மத்திய தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் லேபர் பீரோ எனப்படும் தொழிலாளர் பணியக அமைப்பில் நிரப்பப்பட உள்ள 875 சூப்பரவைசர், இன்வெஸ்டிகேட்டர், கன்சல்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 875

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Supervisor - 143
பணி: Investigator - 695
பணி: Stenographer - 19
பணி: Stenographer - 06
பணி: Assistant - 12

பணியிடங்கள்: சென்னை, மும்பை, அகமதாபாத், சண்டிகார், கான்பூர், கொல்கத்தா, கவுகாத்தி

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பிஇ., புள்ளியியல், கணிதவியல், பொருளாதாரம், அப்ளைடு பொருளாதாரம், வணிக பொருளாதாரம், எக்னாமெட்ரிக்ஸ், புள்ளியியல், கணிதவியல், வணிகவியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், பிளஸ் டூ தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெறவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 35க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.lbchd.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் சம்பளம், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய : http://www.lbchd.in/Advt_AFES_PMMY.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...