மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவப் படைப் பிரிவுகளில் காலியாக உள்ள 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துணை ராணுவப் படைப் பிரிவான மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 21 ஆயிரத்து, 569 வீரர்கள் பணியிடம், எல்லைப் பாதுகாப்பு படை, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை உள்பட, 54 ஆயிரத்து, 963 பணியிடங்களை எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் நிரப்பப்படவுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு விரைவில் அறிவிக்கப்பட உள்ள வேலைவாய்ப்பை அறிவிப்பை நாட்டு மக்களுக்காக சேவை செய்ய துடிப்புடன் இருக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment