நாடு முழுவதும் செயல்பட்டு பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தின் (BHEL) பெங்களூரு கிளையில் காலியாக உள்ள திட்ட பொறியாளர், மேற்பார்வையாளர் என 74 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 74
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Project Engineer - 40
பணி: Supervisor - 34
1. Engineer-Electrical (FTA-1) - 5
2. Engineer-Civil (FTA-2) - 6
3. Engineer-Mechanical (FTA-3) - 6
4. Supervisor-Electrical (FTA-4) - 22
5. Supervisor-Civil (FTA-5) - 8
6. Supervisor-Mechanical (FTA-6) - 4
7. Engineer-Electrical (FTA-7) - 10
8. Engineer-Civil (FTA-8) - 3
9. Engineer-Mechanical (FTA-9) - 10
சம்பளம்: Project Engineers பணிக்கு மாதம் ரூ. 56,580, Supervisor பணிக்கு மாதம் ரூ.28,180 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.07.2018-ஆம் தேதியின்படி 33-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bheledn.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2018
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளமான www.bheledn.com-இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment